சாதிப் பெயரை கேட்ட காவலர்... நடவடிக்கை எடுத்த எஸ்.பி

policeman-who-asked-the-name-of-the-caste-to-the-person-who-was-not-wearing-a-mask

திருப்பூரில் முகக்கவசம் அணியாமல் வந்தவரிடம் அபராதம் விதிக்கும்போது சாதி பெயரை கேட்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


Advertisement

திருப்பூர்-பெருமாநல்லூர் நாலுரோடு பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த நபரிடம் ஆயுதப்படைக் காவலர் காசிராஜன் அபராதம் விதிக்க அவருடைய விவரங்க‌ளைக் கேட்கும்போது சாதி பெயரைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் காசிராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

image


Advertisement

இந்நிலையில், பெருமாநல்லூர் காவல்நிலையப் பணியில் ஈடு‌ட்டிருந்த காசிராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி திஷா மிட்டல் உத்தரவிட்டார்.‌ இதனிடையே சம்பவம் தொடர்பாக‌ விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement