’பிரபாஸ் 21’ படத்தில் இணைந்துள்ள அமிதாப் பச்சான்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’தேசிய விருது’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Advertisement

image

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’மகாநடி’ கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. தமிழில் ’நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததோடு, சிறந்த தெலுங்கு மொழி படம் என்ற மற்றொரு தேசிய விருதும் மகாநடிக்கு கிடைத்தது.


Advertisement

image

தேசிய விருதுகளைக் குவித்த இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் நாக் அஸ்வின். இவர் தற்போது, பாகுபலி புகழ் பிரபாஸ், தீபிகா படுகோனேவை வைத்து பெயரிடப்படாத ’பிரபாஸ் 21’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கான, அறிவிப்பு இருமாதங்களுக்கு முன் வெளியானது.

image


Advertisement

இந்நிலையில், இன்று இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement