மீண்டும் விஜய் படத்துடன் மோதும் கார்த்தி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த ’பிகில்’ படத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த ’கைதி’ கடந்த ஆண்டு தீபாவளியில் மோதியது. பெரிய பட்ஜெட், விஜய்யின் ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றால் பிகில்தான் ஃபாக்ஸ் ஆபிஸில் முந்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


Advertisement

image

ஆனால், அதனை பொய்யாக்கியது ’கைதி’. வித்தியாச கதைக்களத்தில், சிறு பட்ஜெட்டில் எடுத்தாலும் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதை நிரூபித்து பிகிலை முந்தி வசூல் சாதனை செய்தது. அதனையடுத்து, தனது அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்தார் விஜய். அதேசமயம், கார்த்தி கைதி வெற்றிக்குப்பிறகு சுல்தான் படப்பிடிப்பில் மும்முரமாக இறங்கினார்.


Advertisement

image

மாஸ்டர் படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்தாலும் கொரோனாவால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியாவதிலும் சிக்கல் உண்டாகி இருப்பதால், பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image


Advertisement

அதேபோல, சுல்தான் படத்தின் முழுப்படப்பிடிப்பும் தற்போது முடிந்திருப்பதால், அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ’சுல்தான்’ படம் ஒரு பண்டிகை நாளில் வெளியிடப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். ’கைதி’ படத்தையும் இவரே தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை நாளில்  சுல்தான் வெளியாகும் என்று அறிவித்திருப்பதால், மீண்டும் விஜய்யுடன் கார்த்தி படம் மோதுமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement