“அலைகளை நிறுத்த முடியாது. ஆனால்”- அப்டேட் தந்த ’கே.ஜி.எஃப் 2’ நடிகர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

“அலைகளை நிறுத்த முடியாது. ஆனால், அதில் பயணம் செய்யக் கற்றுக்கொள்ளலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராக்கி செட் இன்று முதல் பயணம் செய்கிறது” என்று  ’கே.ஜி.எஃப் 2’ படத்தின் ஹீரோ யஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

image

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில்  ‘கே.ஜி.எஃப்’ வெளியாகி இந்தியா முழுக்க வசூல் சாதனை செய்ததால், அதன் இரண்டாம் பாகத்தை அறிவித்தது படக்குழு. சஞ்சை தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கே.ஜி.எஃப் 2 எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனாவால் படப்பிடிப்பு தடைப்பட்டது.


Advertisement

 

சமீபத்தில் ஷூட்டிங் நடத்த மத்திய அரசு விதிமுறைகளைத் தளர்த்தியதால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஷூட்டிங் தொடர்ந்தது. அதில், பிரகாஷ் ராஜின் பகுதிகள் எடுக்கப்பட்டன. தற்போது, இறுதிக்கட்டக் காட்சிகள் எடுக்கவுள்ளதால், அப்படத்தின் ஹீரோ யஷ் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இணைந்துள்ளார்.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement