ராம்விலாஸ் பஸ்வான் மறைவு - தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ’’ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவு லோக் ஜனசக்தி கட்சிக்கும், பீகார் மக்களுக்கும் பேரிழப்பு’’ என்று கூறியுள்ளார்.

தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ‘’ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. தனது துறையில் பல பணிகளை தமிழக நலனுக்காகவும் செய்துள்ளார்’’ என்று கூறியுள்ளார்.


Advertisement

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார் 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘’ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டும் என்ற கருத்தையும் பதிய வைத்தவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ‘’எல்லோரிடமும் எளிமையாக பழகக் கூடியவர் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான். அவரின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு; தனிப்பட்ட முறையிலும் எனக்கு இழப்புதான்’’ என்று கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement