பாரதி ராஜாவுக்கு பதிலடி கொடுத்த ‘இரண்டாம் குத்து’ பட இயக்குநர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’இரண்டாம் குத்து படத்தின் போஸ்டரை பார்க்க கண்கள் கூசுகிறது’ என்று விமர்சித்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அப்படத்தின் இயக்குநர் பாரதிராஜா படத்தின் ’டிக் டிக் டிக்’ போஸ்டரை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.


Advertisement

’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் அறியப்படுபவர் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கிய கஜினிகாந்த் படத்திற்குப் பிறகு, தற்போது இரண்டாம் குத்து படத்தை இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் இயக்குநர் பாரதிராஜா, ”சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியமாகி இருக்கிறது. மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருகிறது.

image


Advertisement

நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன். ’இரண்டாம் குத்து’ என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். தமிழகத்திலுள்ள எத்தனை கும்பங்கள் இதனை பார்க்க கூசியிருக்கும்? இதனை செய்பவர்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? அதனை கண்டிக்கவில்லையா?” என்று அறிக்கை விட்டிருந்தார்.

அதற்கு, பதிலடியாக இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன்,மாதவி,ராதா நடிப்பில் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான டிக்..டிக்..டிக் படத்தின் போஸ்டரை வெளியிட்டு “இதைப் பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement