இலவச கட்டாய கல்வி உரிமையை மறுக்கும் தனியார் பள்ளி! - பெற்றோர் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசின் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வழங்க கடைசி நேரத்தில் மறுக்கப்படுவதாக தனியார் பள்ளி  மீது பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.


Advertisement

6-14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தையும் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டப்படி அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும். அரசு நிர்வாகக் குழுக்களால், நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள் 25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

image


Advertisement

இந்நிலையில், திருச்சி தனியார் பள்ளி ஒன்றில் அரசின் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 23 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 5 பேருக்கு மட்டுமே பள்ளியில் சேர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதமுள்ள 18 பேரை சேர்க்க முடியாது என பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே சேர்க்கப்படுவார்கள் எனவும் இவர்கள் அனைவரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளவர்கள் என்பதால் அனுமதிக்கவில்லை எனவும் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement