சத்தீஸ்கரில் கொடூரம்.. கல்யாண வீட்டில் மணப்பெண்ணின் தோழி கும்பலால் வன்கொடுமை?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கல்யாண வீட்டில் மணப்பெண்ணின் தோழி 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தின் கொண்டகாவ்ன் மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதான பெண் ஒருவர், தன்னுடைய தோழியின் திருமணத்திற்காக சென்றுள்ளார். அப்போது அன்றிரவு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மண்டபத்துக்கு வெளியே தனியாக நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணை கல்யாணத்திற்கு வந்த 7 வாலிபர்கள் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம் என அந்த 7 பேரும் மிரட்டியுள்ளனர். மறுநாள் வீட்டிற்கு வந்த அந்த பெண் தனக்கு நடந்ததை தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார்.


Advertisement

இந்நிலையில் அவமானம் தாளாமல் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அவர்களின் நடவடிக்கையில் திருப்தியில்லாமல் இருந்தார். இதனால் அவர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் அவரை சந்தித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதியளித்து சமாதானம் செய்தனர். கும்பல்  வன்கொடுமை தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

மேலும் இறந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இச்சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Courtesy: https://www.ndtv.com/india-news/chhattisgarh-cops-exhume-teens-body-to-probe-gang-rape-after-father-attempts-suicide-2306959?pfrom=home-bigstory

 

loading...

Advertisement

Advertisement

Advertisement