தஞ்சை: மன்னர் கால சுரங்க நீர் வழிப்பாதை கண்டுபிடிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தஞ்சையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த சுரங்க நீர் வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.


Advertisement

மன்னர் காலங்களில் தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு சுரங்க நீர் வழித்தடங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. காலப்போக்கில் இவையெல்லாம் மறைந்த நிலையில், தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க நீர் வழிப் பாதை 300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

தற்போது இந்த நீர் வழிப்பாதையில் அடைப்புகளை சரிசெய்ய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 3 சேனல்களை அய்யன் குளம் அருகில் கண்டுபிடித்து அதை மீண்டும் அதிகாரிகள் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிவகங்கை குளம் வரை மீதமுள்ள மற்ற சேனல்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது அய்யன் குளத்திற்கு தண்ணீர் செல்ல தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளிலும் சேனல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிவகங்கை குளத்தில் இருந்து அயன் குளத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement