சென்னை மக்கள் தொகையில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி வரை சென்னை மாநகரில் நடைபெற்ற 56,480 முகாம்களில் மொத்தம் 28,71,934 பேர் கலந்து கொண்டதாக குடிமை அமைப்பு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலந்து கொண்டவர்களிடமிருந்து, 1,61,494 மாதிரிகள் எடுக்கப்பட்டு, சுமார் 26,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 16 சதவீதமாக உள்ளது.
திருவிகர் நகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காய்ச்சல் முகாம்களில் கலந்து கொண்டனர்.
திருவிகர் நகரில் நடைபெற்ற 5322 முகாம்களில் 3,21,607 பேரும், தேனாம்பேட்டையில் நடைபெற்ற 5922 முகாம்களில் 3,09,988 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் முதல் வாரம் வரை ஒவ்வொரு நாளும் சராசரியாக 30,000 பேர் முகாம்களில் கலந்துகொண்டாலும், செப்டம்பர் மாதத்தில் இது படிப்படியாக 50 சதவீதம் குறைந்து சுமார் 13,000 பேராக குறைந்தது. இருப்பினும், அக்டோபர் 6 ஆம் தேதி, 441 முகாம்களில் 21,081 பேர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறுகையில், ‘காய்ச்சல் முகாம்கள் குறைந்தது டிசம்பர் வரை நீட்டிக்கப்படும்’ என்றார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை