சமூக ஊடக தளங்களில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஆன்லைன் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று புதிய சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது.
இந்தியாவில் சிறுமிகளுக்கான உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக செயல்படும் அரசு சாரா நிறுவனமான, பிளான் இன்டர்நேஷனல் நடத்திய சர்வதேச பெண் குழந்தை 2020 ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட (58 சதவீதம்) பெண்கள் ஆன்லைன் துன்புறுத்தல்களை அல்லது துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
பிரேசில், இந்தியா, நைஜீரியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளில் 15 முதல் 25 வயதுடைய 14,000 பெண்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த ஆய்வில் வாக்களித்தனர். ஐந்து சிறுமிகளில் ஒருவர் (19 சதவிகிதம்) ஆன்லைன் மூலம் துன்புறுத்தப்பட்ட பின்னர், தனது சமூக ஊடக தளத்தின் பயன்பாட்டை விட்டுவிட்டார் அல்லது கணிசமாகக் குறைத்துள்ளார் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தில்தான், இந்த ஆய்வில் வாக்களித்த 39 சதவீத பெண்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறினர், அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் (23 சதவீதம்), வாட்ஸ்அப் (14 சதவீதம்), ஸ்னாப்சாட் (10 சதவீதம்), ட்விட்டர் (9 சதவீதம்) மற்றும் டிக்டாக் (6 சதவீதம்) என இந்த பட்டியலில் உள்ளது. இந்த ஆய்வில் கிட்டத்தட்ட பாதி பேர் உடல் அல்லது பாலியல் வன்முறையை இலக்காக வைத்து அச்சுறுத்தப்பட்டதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதைத்தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள இளம்பெண்கள், ஆன்லைன் துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்களை புகாரளிக்க மிகவும் பயனுள்ள வழிகளை உருவாக்கவேண்டும் என சமூக ஊடக நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!