கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் டெஸ்ட் மேட்சில் ஆடுவதுபோல சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ் ஆடியதுதான் தோல்விக்கு காரணம் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் 21வது லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி. கொல்கத்தா நிர்ணயித்த 168 ரன்களை என்ற வெற்றி இலக்கை அடைய களமிறங்கிய சிஎஸ்கே அணி சிறப்பாகவே விளையாடியது.
வாட்சன், ராயுடு ஆகியோர் அணியை பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வாட்சன், ராயுடு, தோனி, சாம் கரன் ஆகியோர் ஆட்டமிழக்க போட்டியின் போக்கு கொல்கத்தா பக்கம் திரும்பியது. ஆனாலும் சிஎஸ்கே வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது. பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டார் கேதர் ஜாதவ்.
அவரும் களமிறங்கியதும் பீல்டர்கள் இருக்கும் திசையை எண்ணினார், பேட்களை மாற்றினார் இன்றைக்கு பெரிய சரவெடி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடினார் ஜாதவ். ரன் தேவையான நேரத்தில் கிடைத்தவரை லாபம் என ரன் எடுக்காமல், ஜடேஜாவுக்கும் வாய்ப்பளிக்காமல் களத்தில் நின்றார் ஜாதவ். அவரின் ஆட்டத்தால்
ரசிகர்கள் பொறுமையை இழந்தனர். இறுதியாக 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார் கேதர் ஜாதவ்.
கடந்த சீசன்களில் சிஎஸ்கேவுக்கு பல வெற்றிகளை கொடுத்தவர்தான் ஜாதவ். ஆனால் இந்த சீசனில் அவுட் ஆஃப் பார்மில் இருக்கிறார். ஜாதவ்வை களமிறக்குவதற்கு பதிலாக பிராவோவை களமிறக்கியிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதிரடியாக ரன் சேர்க்க கூடிய பிராவோவை முன் கூட்டிய களமிறக்கியிருந்தால் சிஎஸ்கேவுக்கு வெற்றி வசமாகும் வாய்ப்பு இருந்திருக்கும்.
அடுத்தப் போட்டியிலாவது கேதர் ஜாதவ்க்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாயப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை