ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தளங்களில் பயணித்து தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி இயக்குநராக இருக்கும் ராம்கோபால் வர்மா இந்தியில் இயக்கிய சர்கார், சர்கார் ராஜ், சர்கார் 3, ரங்கீலா, சத்யா, ரக்தா சரித்ரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தவை. சினிமாத்துறையினாரால் அன்போடு ஆர்.ஜி.வி என்று அழைக்கப்படுகிறார்.

 image


Advertisement

இவர் தயாரிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான சூல் திரைப்படம் சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருதை வென்றது. பேய் படங்கள், த்ரில்லர் படங்கள், கேங்ஸ்டர், அரசியல் என வெரைட்டியான தளங்களில் படங்களை இயக்கி தெறிக்கவிட்டவர். இயக்குநர் மணிரத்னம் ராம்கோபால் வர்மா கூட்டணியில் உருவானதுதான் திருடா திருடா திரைப்படம். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை இந்தியில் முதன் முதலில் தனது ரங்கீலா படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ஒரு தேசிய விருது உட்பட 7 நந்தி விருதுகளையும் வென்றுள்ளார். இந்திய சினிமா உலகில் எவ்வளவு புகழை அடைந்திருக்கிறாரோ, அதேபோல அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குநரும் இவரே.

 image

இவர் தற்போது இயக்கியுள்ள ‘ஆர்ஜிவி மிஸ்ஸிங்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு ”ஆர்ஜிவி மிஸ்ஸிங் படத்தின் புதிய நடிகர் கஜினிகாந்த். வேறு யாராவது ஒருவரின் சாயல் தெரிந்தால் அது முற்றிலும் தற்செயலானது” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

இதிலுள்ள நடிகர் ரஜினிபோலவே இருப்பதால்  ரஜினியை கிண்டல் அடிப்பதுபோல் உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement