திமுக கூட்டணிக்கு வித்திடுகிறதா பாஜக...? - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

Is-the-BJP-sowing-seeds-for-the-DMK-alliance-in-the-Assembly-elections

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தற்போதுள்ள கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி. சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி அதிமுகவுடன் இருக்கலாம், அல்லது திமுகவுடன் இருக்கலாம், அல்லது இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம். நாங்களே கூட்டணி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் வாய்ப்புள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.


Advertisement

image

பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த கருத்து குறித்து மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறுகையில், “அவர் சொன்னது சரிதான். இப்போது அதிமுக தலைமையில் கூட்டணி என்பதே கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலின்போது கையெழுத்திட்டு கூட்டணி வைத்தனர். தேர்தல் முடிந்ததும் அது காலாவதியாகிவிட்டது. சட்டப்பேரவைக்கான கூட்டணி இனிமேல்தான் அமைய வேண்டும். அதுதான் உண்மை. கூட்டணி வேறாக அமைக்கலாம் என சொல்கிறார். ஆனால் திமுகவில் கூட்டணி மாற்றங்களுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஸ்டாலின் ஏற்கெனவே வேலைப்பாடுகளை ஆரம்பித்துவிட்டார்.


Advertisement

ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுக கூட்டணியில் பல மாற்றங்கள் வரலாம். ரஜினியுடன் பாஜக கூட்டணி அமைக்கவும் வாய்ப்புண்டு. இல்லையென்றால் பாஜக தனித்து நிற்க வேண்டும் அல்லது அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எங்கள் வயிற்றில் அடிக்கிறார் வைகை செல்வன்... அ.தி.மு.க பேச்சாளர்களின்  பேஜார்..!

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், “தேர்தல் காலத்தில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்துரைப்பார்கள். அவற்றையெல்லாம் கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மாநிலக் கட்சியை பொருத்தவரை அதன் தலைவர்கள் சொல்லும் கருத்தே இறுதி முடிவு. அதே போன்று தேசியக் கட்சிகளை பொருத்தவரை அதிகாரம் என்பது தேசிய அளவில் இருக்கும் தலைவர்கள் மத்தியில்தான் இருக்கும். மாநில அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் கூறும் கருத்தை சொந்தக் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


Advertisement

கூட்டணி குறித்து பேச இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது அதிமுக தங்களுடைய முடிவை சொல்லும். நட்டா, அமித்ஷா போன்ற தலைவர்கள் பேசும்போதுதான் அது கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.

முரசொலி நில விவகாரத்தில் மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது: பாஜக மாநில  செயலாளர் சீனிவாசன்

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். யாருடன் கூட்டணி? யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து இப்போது பேச வேண்டாம். அது தேர்தல் வரும்போது பேசி கொள்ளலாம் என்று நாங்களும் சொல்லிவிட்டோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை பிரதமர் மோடிதான் என்பது தெளிவாகிவிட்டது. அதனால் மாநிலக் கட்சி கூட்டணிக்குள் பிளவுகள் வராது. ஆனால் சட்டமன்ற கூட்டணி என்பது யார் முதல்வர் என்பதை தீர்மானம் செய்வது. அதனால் இப்போது அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியாது. ஜனவரிக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கிடைக்கும். புதிய அரசியல் கட்சிகள் தோன்றலாம். அதனால் அதைப் பார்த்துதான் முடிவு எடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறதா ? அதிர்ச்சியில்  எடப்பாடி !!

இதுகுறித்து திமுகவின் அப்பாவு கூறுகையில், “ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனால் இருத்தரப்புக்கும் முரண்பாடு ஏற்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரிகிறது, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் படுத்தோல்வி கிடைக்கும் என்று. அதனால்தான் அதை சொல்கிறார். அதிமுக ஒன்றுமில்லாமல் போகப் போகிறது என்பதால் பொன்.ராதாகிருஷ்ணன் முன்கூட்டியே சொல்கிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஸ்டாலின் பலமுறை கூறிவிட்டார் என்பதை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement