இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தை அப்டேட் செய்யும்போது ’நேற்றுதான் திருமணம் ஆனது’ என்று ட்விட்டர் பதிவு காட்டியதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி கடந்த 2007-ஆம் ஆண்டு ’கூடல்நகர்’ படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். அதற்கடுத்ததாக, கடந்த 2010-ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ சிறந்த தமிழ் படம், சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகை, வைரமுத்துவுக்கு சிறந்த பாடல் ஆசிரியர் ஆகிய மூன்று தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தது.
இவரின் தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‘எந்தப் பக்கம்’ பாடலுக்கும் வைரமுத்துவுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சேதுபதியை ஹீரோவாக முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை சீனு ராமசாமியையே சேரும்.
நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும், இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வெளியாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், சீனு ராமசாமி ’got married yesterday’ என்று ஸ்டேட்டஸ் வெளியானதால், அதற்கு விளக்கம் அளித்து,
இது தவறான தகவல்
எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம். pic.twitter.com/RTxuWsAiHX — R.Seenu Ramasamy (@seenuramasamy) October 7, 2020
“இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்
Loading More post
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?