வேலைக்கு உதவாத பயோமெட்ரிக் மெஷின்.. கோபத்தில் திரும்ப ஒப்படைத்த ரேஷன் ஊழியர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல்லில் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பயோமெட்ரிக் மெஷின் சரிவர செயல்படாத காரணத்தால் அதிகாரியை முற்றுகையிட்டு மெஷினை  ரேஷன் கடை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.   


Advertisement

image  

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட 90 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 137 நியாயவிலை கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு புதிதாக பயோமெட்ரிக் மெஷின் வழங்கப்பட்டுள்ளன. 


Advertisement

image

ரேஷன்கடை ஊழியர்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் நியாயவிலை பொருட்களை வழங்கி வருகின்றனர். இதற்கிடையே இந்த பயோமெட்ரிக் மெஷின் சர்வர் குறைபாடு காரணமாக சரிவர வேலை செய்யவில்லை. அதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்குவதற்கும் காலதாமதம் ஆகிறது. 

image


Advertisement

இதனால் ரேஷன்கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு பொது விநியோக திட்ட ஊழியர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் தலைமையில், திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் மெஷினோடு திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் விஜயலட்சுமியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தாங்கள் கொண்டு வந்த இயந்திரத்தை திருப்பிக் கொடுத்தனர். வட்ட வழங்கல் அதிகாரி, நியாயவிலைக் கடை ஊழியர்களை சமரசம் செய்து பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மெஷினில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

loading...

Advertisement

Advertisement

Advertisement