சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


Advertisement

மதுரை தத்தனேரி மின்மயானப் பகுதியை ஒட்டியுள்ள பாக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஆட்டோ, வேன், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களின் முன் மற்றும் பின்பக்க கண்ணாடிகளை மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களாலும், செங்கற்களை கொண்டும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

image


Advertisement

மேலும் அதனைத் தடுக்க வந்த பொதுமக்களையும் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

image

அப்போது அதில், இளைஞர்கள் சிலர் மது போதையில் பயங்கர ஆயுதங்களால் வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மதுரையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement