வீட்டில் அடுத்தடுத்து நடந்த துயரம்.. தாங்க முடியாமல் பெண் தற்கொலை

Woman-sets-fire-after-losing-her-husband-and-son

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற சென்ற அவரது மகனுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

உத்தர பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்திலுள்ள மாஹுவா கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான சௌபி தேவி. இவர் தனது வீட்டில் நேற்று தீவைத்துக் கொண்டார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது மகன் ஷங்கருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரையும் மீட்ட உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும்முன்பே தேவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 60 சதவீத காயங்களுடன் ஷங்கர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.


Advertisement

image

இதுபற்றி குடும்பத்தினரை போலீஸார் விசாரித்ததில், அந்த பெண்ணுக்கு 3 மகன்கள் இருந்திருக்கின்றனர். மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து கடைசி மகனும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கடைசியாக அந்தப் பெண்ணின் கணவரும் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பெண் நீண்ட நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதனால்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் கூறியிருக்கின்றனர்.

14 வயதில் கர்ப்பம்... ஆத்திரத்தில் மகளின் தலையை துண்டித்த தந்தை.! 


Advertisement

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement