14 வயதில் கர்ப்பம்... ஆத்திரத்தில் மகளின் தலையை துண்டித்த தந்தை.!

14-year-pregnant-girl-was-killed-by-her-father-in-UP

உத்தரபிரதேசத்தில் 14 வயது பெண்ணின் தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

உத்தரபிரதேச மாநிலம், சிதௌலி பகுதியில் உள்ள துல்காபுர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமடைந்துள்ளார். இதை வீட்டிற்குத் தெரியாமல் சமாளித்து வந்திருக்கிறார்.

ஆறு மாத கர்ப்பமான அவரை தந்தை விசாரித்துள்ளார். அவர் யாரையோ காதலித்து வருவதாக சந்தேகித்த அந்த பெண்ணின் தந்தையும், மூத்த சகோதரனும் தொடர்ந்து கேட்டிருக்கின்றனர். ஆனால் அந்தப் பெண், தனது கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது பற்றி எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார். கொலையை மறைக்க தந்தையும், மகனும் சேர்ந்து அந்தப் பெண்ணின் தலையை துண்டித்து, அங்கிருந்த சாக்கடைக்கு அருகில் மறைத்து வைத்திருக்கிறார்.


Advertisement

image

நேற்று அந்தப் பெண்ணின் உடலைக் கண்டுபிடித்த கிராமத்து மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். விசாரணையில், அந்த பெண்ணின் தந்தை, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். செப்டம்பர் 24ஆம் தேதியே இந்த கொலை நடந்ததையும், யாருக்கும் தெரியாமல் மறைத்துவிட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளார். தனது மகளின் கர்ப்பத்திற்கு காரணமானவருடனேயே திருமணம் செய்துவைக்க நினைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அந்த பெண்ணின் சகோதரன் தற்போது தலைமறைவாகி விட்டார்.

சாலையில் படுத்திருந்த சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய வனக்காவலர்.! 


Advertisement

இதுகுறித்து போலீஸார் ப்ரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தந்தைமீது இந்திய சட்டப் பிரிவுகள் 302(கொலை) மற்றும் 201(தடயங்களை மறைத்த குற்றம்)இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement