’’90% பேர் மாஸ்க் அணிவதில்லை’’ - சென்னை காவல் ஆணையர் அகர்வால்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே இந்த நேரத்தில் நாடு முழுவதும் மாதந்தோறும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநகரங்களில் சென்னையும் ஒன்று. மக்கள் நடமாட்டம் அதிகரிக்க அதிகரிக்க கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.


Advertisement

சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் போன்ற அடிப்படை விதிமுறைகளைக் கடைபிடிப்பதன்மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என அரசாங்கமும், மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பொதுவெளியில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள்மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் மாஸ்க் அணியாமல் பலரும் வெளியே நடமாடுவதைப் பார்க்கும்போது கொரோனா பயம் குறைந்துவிட்டது என்று தெரிகிறது.

image


Advertisement

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டிக் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ’’விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப் படுகிறதை காவலர்கள் உறுதிசெய்து வருகின்றனர். விதியை மீறுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிக கூட்டம் கூடுகிற இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுவதையும் காவலர்கள் உறுதிசெய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

இந்த வருட இறுதிக்குள் கொரோனா தடுப்பூசிகள் தயாராகும் என நம்புகிறோம்  -WHO இயக்குநர் 

இதுதவிர, மாஸ்க் அணியாதவர்கள்மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனாலும் ஒரு நாளில் குறைந்தது 400-500 பேர் மாஸ்க் அணியாமல் வெளியே வந்த குற்றத்திற்காக அபராதம் செலுத்துகின்றனர். உண்மையை சொல்லவேண்டுமானால், 90% பேர் வெளியே வரும்போது மாஸ்க் அணிவதில்லை. வாகனங்களை ஓட்டும்போதுகூட மாஸ்க் அணியவேண்டும் என்பதை கடுமையாக கவனித்துவருகின்றனர் காவல்துறையினர்’’ என்று கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement