’’குளிர்காயலாம் என்ற எதிரிகள் நினைப்பில் மண்’’ : அமைச்சர் ஜெயக்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் குளிர்காயலாம் என்ற எதிரிகள் நினைப்பில் மண் விழுந்துள்ளது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பிற்கு பின்னர் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் குளிர்காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்துள்ளது. அனைவரின் முழுமனதுடன் வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.


Advertisement

வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அதிமுக கட்சியை வழிநடத்தக்கூடிய வழிகாட்டுதல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர் ஜெயக்குமாரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement