அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடித்து வந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 3 முறை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுவாரா? என்பது குறித்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


Advertisement

image

அண்மையில் இதனை பற்றி ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் அதிமுகவின் முதல்வர் யார் என்பது குறித்து அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திட்டமிட்டப்படி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


Advertisement

தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால் தமிழகத் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement