இணையதகவல்களை முடக்கி பணம் கேட்டு மிரட்டும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல், உலகளவில் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று மாதங்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகின் கணினி யுகத்தையே ஆட்டிப்படைப்பது ரான்சம்வேர் வைரஸ். நமது கணினி பயன்பாட்டை முடக்கிவைத்துக்கொண்டு பணம் கொடுத்து மீட்டுக்கொள் என்று பேரம் பேசும் மோசமான சைபர் ஆயுதம் இந்த வைரஸ். அதாவது நாம் கம்யூட்டரில் இணையவழி இணைந்திருக்கும்போதும் ரான்சம்வேர் வைரஸ் சில அர்த்தமற்ற சங்கேத எழுத்துக்களை அனுப்பும் அதனை நாம் கிளிக் செய்துவிட்டால்போதும் நமது கணினி கோப்புகள் அனைத்தும் முடங்கிப்போகும். முடங்கிய கோப்புகளை மீட்க ஹேக்கர்களுக்கு நம் பெரும்தொகை கொடுக்கவேண்டும், இதுதான் இந்த வைரஸின் கோரமுகம்.
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல்கள் 39 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வைரஸ் அச்சுறுத்தல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக் பாயிண்ட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்காவில் ரான்சம்வேர் தாக்குதல்கள் இருமடங்காக, அதாவது சுமார் 98 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து நாடுகளில் இலங்கை, ரஷ்யா மற்றும் துருக்கி முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.
உலகளவில் ரான்சம்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளின் சதவீதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, அமெரிக்காவில் சுகாதாரத்துறை அதிகம் ரான்சம்வேர் தாக்கப்பட்ட துறையாக இருக்கிறது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
Loading More post
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை