'சுயபிம்பத்தை கட்டமைப்பதில் தீவிரம் காட்டும் பிரதமர்' ராகுல்காந்தி குற்றச்சாட்டு

PM-Modi-is-only-keen-about-his-image-says-Rahul-Gandhi

நாட்டில் நிகழ்பவை குறித்து கவலைப்படாமல், தனது சுய பிம்பத்தை கட்டமைப்பதிலேயே பிரதமர் மோடி கவனம் செலுத்துவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், நடைபெற்ற டிராக்டர் பேரணியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மட்டுமல்ல, நுகர்வோர்களையும் பாதிக்கிறது என்றார்.

image


Advertisement

மூன்று கருப்பு வேளாண் சட்டங்கள் மூலம் இந்தியாவின் ஆன்மாவை, மத்திய அரசு பிடித்துவைத்துள்ளது என கூறிய ராகுல் காந்தி, நாட்டில் நிகழ்பவை குறித்து கவலைப்படாமல், தனது சுய பிம்பத்தை கட்டமைப்பதிலேயே பிரதமர் மோடி கவனம் செலுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். டிராக்டர் பேரணியின் போது, குஷன் சீட்டில் அமர்ந்து செல்வது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமருக்காக ஏர் இந்தியா ஒன் சொகுசு விமானம் வாங்கப்பட்டுள்ளது குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement