சிம்புவின் ‘மாநாடு’ ஷூட்டிங் நவம்பர் தொடக்கம்: தயாரிப்பாளர் அறிவிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்திருக்கிறார்.


Advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி மீண்டும் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்டது.


Advertisement

image

ஆனால், இரு தரப்பும் ஒற்றுமையாக இருந்தாலும் கொரோனா தடையாக இத்தனை மாதம் அமைந்தது. இந்நிலையில், தமிழக அரசு சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியதால் அடுத்தமாதம் படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது என்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement