ஹத்ராஸில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவமனையில் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹத்ராஸில் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


Advertisement

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, அதே ஹத்ராஸில் 4 வயது குழந்தை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

image


Advertisement

சிறுமியின் பெற்றோர் புகாரை அடுத்து உறவினர் வீட்டில் சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  சிறுமி இன்று சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். சிறுமியின் மருத்துவ சோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Courtesy: https://www.ndtv.com/india-news/6-year-old-hathras-girl-raped-by-cousin-dies-at-delhi-hospital-cops-2306004?pfrom=home-topstories

loading...

Advertisement

Advertisement

Advertisement