“சாஹலின் பவுலிங்க் குறித்து நிறைய பேச வேண்டும்” - கவுதம் காம்பீர் பாராட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுழற்பந்து வீச்சாளர் சாஹலின் பவுலிங் குறித்து நிறைய பேச வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடர் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஐபிஎல் தொடரில் சிறந்து பவுலர்களுக்குத்தான் பஞ்சம் இருக்கிறது. சிறப்பாக பந்துவீசும் பவுலர்கள் 5 பேர் கூட ஐபிஎல் தொடரில் இல்லையென கூறலாம். சர்வதேச அளவில் ஜாம்பவான்களாக இருந்தாலும், ஐபிஎல் தொடரில் ஒரு சிலரைத் தவிர அந்த அளவிற்கு யாரும் ஜொலிப்பதில்லை.

 image


Advertisement

டெல்லி அணியில் ரபாடா, ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், ஹைதராபாத் அணியில் ரஷீத் கான் ஆகியோர் தான் சிறப்பாக செயல்படுகின்றனர். பவுலிங்கில் கைதேர்ந்தவரான இந்திய பவுலர் பும்ராவின் பந்துகள்கூட ஐபிஎல் தொடரில் பவுண்டரிகளுக்குத் தான் பறக்கின்றன. இதற்கிடையே சத்தமின்றி ஐபிஎல் தொடரின் விக்கெட் டேக்கர்களில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சாஹல். இதுவரை 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹல், பவுலிங் சராசரி 18.00 ஆக வைத்திருக்கிறார்.

image

இவர் குறித்து பேசியுள்ள கவுதம் காம்பீர், “நாம் அனைவரும் ரஷீத் கான், ஆர்ச்சர், ரபாடா என வெளிநாட்டு வீரர்கள் குறித்து பேசுகிறோம். ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் குறித்து நாம் அதிகம் பேச வேண்டும். அவர் எப்போதும் புத்திசாலி தான். அவரது பவுலிங்க் திறமையை நடப்பு ஐபிஎல் தொடரிலேயே கண்டுக்கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement