உலகின் நீளமான கால்களைக் கொண்ட 17 வயது இளம் பெண் கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் சிடார் பார்க்கைச் சேர்ந்த மேசி கர்ரின் என்ற இளம் பெண்ணின் இடது கால் 135.26 செ.மீ, வலது கால் 134.3 செ.மீ நீளமும் கொண்டதால் உலகின் மிக நீண்ட கால்கள் என்று அடுத்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார்.
இவரது கால்கள் மட்டுமே ஒன்னரை அடி நீளம் கொண்டவை. இவருடன் பிறந்த சகோதர சகோதரிகள் இருந்தாலும் மேசி மட்டும்தான் உயரமானவராக காணப்பப்பட்டு ஆச்சர்யமளிக்கிறார். இவரது, உயரத்தை ஸ்டூல் போட்டு நின்றால்தான் எட்ட முடிகிறது.
”எனக்கு நீண்ட கால்கள் இருப்பது சவாலாக இருக்கிறது. சில இடங்களில் கதவுகளைத் திறந்து நுழைவது, கார்களில் ஏறுவது, உயரத்திற்கேற்ற துணிகள் கிடைப்பது கடினம் என்றாலும் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.
ஆனால், எனது பள்ளியில் கைப்பந்து விளையாட்டு விளையாடும்போது, ஈஸியாக இருக்கிறது” என்று புன்னகையோடு கூறும் மேசி டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக உள்ளார். கின்னஸ் சாதனையோடு மாடலிங் உலகில் நுழைந்து ’உலகின் உயரமான மாடல்’ என்ற சாதனையையும் படைக்கவுள்ளார்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!