பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்: அமைச்சர் செங்கோட்டையன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பள்ளிகள் திறப்பு பற்றி மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் உள்ளாட்சித் துறை உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன.


Advertisement

தனியார் மற்றும் சில அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களைப் படித்துவருகின்றனர்.

image


Advertisement

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமிதான் முடிவு எடுப்பார். பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.

கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது பற்றி விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தகரம் அடிப்பது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement