கன்னியாகுமரியில் சர்ச்சை போஸ்டர் - போலீசில் புகார் அளித்த காங்கிரஸ் கட்சியினர்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை தொடர்பாக கன்னியாகுமரியில் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டிய பாஜக மீது காங்கிரஸ் கட்சியினர் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
 
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் குமரி மாவட்ட மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 
image
 
‘’பாஜக கன்னியாகுமரி மாவட்டம், பாஜக கொல்லங்கோடு ஊராட்சி ஆகிய பெயர்களில், ‘உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் செல்வி மனிஷா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்’ என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நற்பெயரை மக்கள் மன்றத்தில் கெடுக்கும் விதத்தில் இந்த அவதூறு கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினரால் திட்டமிட்டு பரப்பப்படும் வீண் வதந்தி ஆகும். மேலும் இத்தகைய விளம்பரங்கள் சமூக வலைதளங்களிலும் திட்டமிட்டு மேற்படி நபர்களால் பரப்பப்படுகிறது.
 
இக்குற்றகர செயல்களால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன், அக்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் மனதில் மிகுந்த துயரமும் மன வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி ஈடு செய்ய இயலாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இச்செயலை செய்த சமூக விரோதிகளால் குமரி மாவட்டத்தில் பொது அமைதிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே சமூகம் கருணை கூர்ந்து இக்குற்றகர செயல்களில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதி நல்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்’’ என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கூறுகையில், ‘’இந்த போஸ்டர் விவகாரம் குறித்து உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் ஸ்தம்பிக்கும் அளவிலான போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.
 
loading...

Advertisement

Advertisement

Advertisement