உ.பி.யிலிருந்து தெலுங்கானாவுக்கு லாரியில் 1,000 கிலோ கஞ்சா கடத்தல்.!

1000-kg-ganja-worth-Rs-1-3-crore-seized-from-UP-bound-truck-in-Hyderabad
உ.பி.யிலிருந்து தெலுங்கானாவுக்கு வந்த லாரியில் இருந்து ரூ.13.3 கோடி மதிப்புள்ள 1,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 
ஹைதராபாத் அருகே ராச்சகொண்டா பகுதியில் நேற்று போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உத்தரப்பிரதேசம் மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். லாரி ஓட்டுனர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததை அடுத்து சந்தேகமடைந்த போலீசார் லாரியில் சல்லடை போட்டு தேடினர். அப்போது ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,010 கிலோ அளவுடைய கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
 
பாக்கெட் பாக்கெட்டாக 194 பாக்கெட்டுகளில் காஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. ஒவ்வொரு பாக்கெட்டும் 5.5 கிலோ எடை கொண்டது என்றும் இதன் மொத்த மதிப்பு ரூ .1.3 கோடி என்றும் போலீசார் தெரிவித்தனர்.
 
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் இருந்து தெலுங்கானா வழியாக உத்தரபிரதேசத்திற்கு கஞ்சா கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. செல்லும் வழியெங்கும் கஞ்சா பொட்டலங்களை விற்று வந்ததாக போலீசாரிடம் லாரி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து லாரி ஓட்டிவந்த ஹரியானாவைச் முகமது ரம்ஜான், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷாஷிகாந்த் கவுதம் ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொபைல் போன்கள் மற்றும் ரூ.4,000 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
மேலும் கஞ்சா சப்ளை செய்த ஒடிசாவைச் சேர்ந்த மகாதேவ், கஞ்சா வாங்கிய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவேக் சிங், லாரி உரிமையாளர் ஹரியானாவைச் சேர்ந்த இம்ரான் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement