MI Vs RR : இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது யார்? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அபுதாபியில் நடைபெற உள்ள நடப்பு ஐபிஎல் சீஸனின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாட உள்ளன.


Advertisement

image

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வேட்கையோடு மும்பை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் ராஜஸ்தான் அணியும் இந்த போட்டியை எதிர்கொள்கிறது.


Advertisement

ஐபிஎல் களத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேராக மோதி உள்ளன. இதில் இரு அணிகளுமே தலா பத்து ஆட்டங்களில் வென்றுள்ளன. 

இரு அணிகளும் கடைசியாக மோதிய ஐந்து ஆட்டங்களில் ராஜஸ்தான் நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 

image


Advertisement

ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், போல்ட் மாதிரியான வீரர்கள் மும்பை அணியின் டிரம்ப் கார்டாக உள்ளனர். 

image

அதே போல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர் மற்றும் ஆர்ச்சர் மாதிரியான வீரர்கள் இடம்பெற்றிருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. 

இந்த சீஸனை பொறுத்தவரை ராஜஸ்தான் அணி ஷார்ஜா மைதானத்தில் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. 

“கடந்த இரண்டு ஆட்டங்களில் ரன் சேர்க்க தவறியிருந்தாலும் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அணிக்கு தேவையான ரன்களை ஸ்கோர் செய்வேன்” என ப்ரீ மேட்ச் பிரஸ் மீட்டில் சொல்லியுள்ளார் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement