புதுக்கோட்டையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ஆறு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 60 வயது மூதாட்டி உட்பட மூவரை கைது செய்த போலீசார் 6 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை வடக்கு நாலாம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கணேஷ் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 6 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண்களை மீட்ட போலீசார் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சாரதா(60) என்ற மூதாட்டியையும் அவருக்கு உடந்தையாக இருந்த களபம் கிராமத்தைச் சேர்ந்த அருண் (31), மாந்தாங்குடியைச் சேர்ந்த வீரன்(55) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட 6 பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அறிவுரை கூறிய போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!