ஆசை வார்த்தையால் ஏமாந்த மக்கள்... பட தயாரிப்பு நிறுவனம் நடத்தியவர் செய்த மெகா மோசடி

That-would-double-the-money-Man-arrested-for-swindling-crores-of-rupees

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பல லட்சம் பணம், நகைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவான நபரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சென்னை திருவான்மியூரில் மதர் கீரின்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை நிஜாமுதீன் (எ) ரவிகுமார் (42) நடந்தி வந்துள்ளார். அங்கு கேட்டரிங் தொடர்பாக பாலவாக்கத்தை சேர்ந்த ஷாநாஸ் பேகம் (52) என்பவர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் அறிமுகமான நிஜாமுதீன் பட தயாரிப்பிற்கு பணம் தேவைபடுகிறது. ஒருலட்சம் கொடுத்தால் 15 நாட்களில் இரட்டிப்பாக கொடுத்து விடுகிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். 

image


Advertisement

இதனை உண்மையென நம்பி ஷாநாஸ் பேகம் தனது மகள்களின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 26 சவரன் தங்க நகை, 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கடந்த 2015ம் ஆண்டு நிஜாமுதீனிடம் கொடுத்துள்ளார். அதற்காக பணம் நிரப்பப்பட்ட காசோலையை வழங்கியுள்ளார் நிஜாமுதீன். பணம் மற்றும் நகையை வாங்கியவர் இதேபோல் பல நபர்களிடம் ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஷாநாஸ் பேகம், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த நிஜாமுதீன் (எ) ரவிகுமாரை கைது செய்தனர். தகவலறிந்து இவரிடம் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் நீலாங்கரை காவல்நிலையம் முன்பு குவிந்தனர். போலீசார் அவர்களிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

உண்மையாக உழைத்து சம்பாதித்தால் மட்டுமே பணத்தை பெருக்க முடியுமே தவிர இது போன்ற கவர்ச்சிகரமாக ஆசை வார்த்தைகளை நம்பினால் இது போல் பணம் மற்றும் நகையை பறிகொடுத்து தான் ஆக வேண்டும் என்கின்றனர் போலீசார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement