கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல் தொடர்ந்து மாற்றி கொடுக்கப்படும் அவலம் நாடெங்கும் அரங்கேறிய வண்ணம் உள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் குளறுபடியாலே இது மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவினால் உயிரிழந்த விழிஞ்சம் பகுதியை சேர்ந்த நபரின் உடலுக்கு மாற்றாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடலை அவரது உறவினர்களிடம் வெள்ளிக்கிழமை அன்று ஒப்படைத்துள்ளனர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர்.
விழிஞ்சம் பகுதியை சேர்ந்த நபரின் உறவினர்ளும் அந்த உடலுக்கு இறுதி சடங்குகளை செய்த நிலையில் சனிக்கிழமை அன்று அவருக்கு மாற்றாக அடையாளம் தெரியாத மற்றொருவரின் உடலை கொடுத்ததை அறிந்து கொண்டது மருத்துவமனை.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!