விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பசுமாடுகள்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கமுதி அருகே விவசாய நிலத்தில் மர்மமான முறையில் பசுமாடுகள் இறப்பு... விஷம் வைத்து கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 


Advertisement

image 


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கரிசல்குளம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த இரண்டு பசுமாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


Advertisement

image 


போலீசாரின் விசாரணையில் வண்ணங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமர் மற்றும் மீனாள் ஆகியோரின் பசுமாடுகள் என தெரியவந்தது. இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின்பேரில் கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


Advertisement

image

 மேலும் பசு மாடுகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்வெளியில் பசுமாடு இறந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement