கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவரை வெள்ளை மாளிகையிலிருந்து வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன்பே ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது.
74 வயதான அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையின்போது இரண்டு முறை ஆக்ஸிஜன் அளவு குறைந்து, உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டதால் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அவருக்கு உணவு கொடுக்கப்பட்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒருநாள் தேவைப்படுவதாகவும், பெரும்பாலும் திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தனர்.
— Donald J. Trump (@realDonaldTrump) October 4, 2020Advertisement
இந்நிலையில், இன்று காலையில் தனது ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், கொரோனா பற்றி தான் நன்கு தெரிந்துகொண்டதாகவும், இந்த அனுபவம் பள்ளிக்குச் செல்வதைப்போல் இருந்ததாகவும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா
அந்த வீடியோ பதிவிட்ட சிலமணிநேரத்தில், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர், வீதிகளில் காத்திருந்த அவருடைய ஆதரவாளர்களுக்கு கையசைத்தபடி சென்றுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த நேரத்தில், மருத்துவமனையில் இருக்கவேண்டிய அதிபர் வெளியே வந்திருப்பது குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி