சிறுமி பாலியல் வன்கொடுமை என்பது சிறிய சம்பவம்: சத்தீஸ்கர் அமைச்சரின் பேச்சும், விளக்கமும்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தீஸ்கர் மாநிலத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது “சிறிய சம்பவம்” என்று கூறியுள்ளார் அம்மாநில அமைச்சர் சிவ்குமார் தஹாரியா.


Advertisement

image

சத்தீஸ்கர் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சிவ்குமார் தஹாரியா, அம்மாநிலத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது “சிறிய சம்பவம்” என கூறியுள்ளார். இந்த கருத்துக்களுக்காக தஹாரியாவை பாஜக கடுமையாக விமர்சித்த பின்னர், அமைச்சர் தனது கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார்.


Advertisement

" உ.பி ஹத்ராஸில் ஒரு துன்பகரமான சம்பவம் நடந்துள்ளது, சத்தீஸ்கர் முன்னாள் பாஜக முதல்வர் ராமன் சிங்,  அதைப் பற்றி ஏன் ட்வீட் செய்யவில்லை? சத்தீஸ்கரில் உள்ள பால்ராம்பூரில் ஏதேனும் சிறிய சம்பவம் நடந்தால், அவர் மாநில அரசை விமர்சிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை" என்று தான் பதிலளித்ததாக கூறினார்.

பின்னர் அவர் தனது கருத்துக்கள் தவறாகக் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், பால்ராம்பூர் வன்கொடுமையை ஒரு சிறிய சம்பவம் என்று நான் அழைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement