சென்னை மக்களால் பயன்படுத்தப்படும் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் 45 சதவீதம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் (என்ஜிடி) தெரிவித்துள்ளது.
கேன்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகள் என குடிநீர் தயாரிக்கும் யூனிட்டுகளில் இருந்து 187 மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அதில் 42 மாதிரிகள் பரிசோதனைக்கு தகுதியற்றவையாக இருந்தன. அதாவது, பரிசோதிக்கப்பட்ட 147 குடிநீர் மாதிரிகளில் 30 மாதிரிகள் பாக்டீரியா பாதிக்கப்பட்டதாகவும், திருப்தியளிக்காதவையாகவும் இருந்துள்ளன. 20 மாதிரிகள் பிராண்ட் பெயரில் தவறாகவும், 14 மாதிரிகள் பிராண்ட் பெயரில் தவறு மற்றும் பாக்டீரியா பாதிக்கப்பட்டதாகவும் இருந்ததாக கண்டறியப்பட்டது.
"இந்த சுகாதாரமற்ற குடிநீரால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற குடிநீரை தடுப்பதற்கு முயற்சி செய்துவருகிறோம். குடிநீர் ஆலைகளில் திடீர் ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலம் நடவடிக்கை எடுத்துவருகிறோம் " என்றார் ஒரு மூத்த சுகாதாரத்துறை அதிகாரி. இதனிடையே தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையினரும் தனியாக 50 குடிநீர் மாதிரிகளை சோதனை செய்துள்ளனர். அதில் 16 மட்டுமே தகுதியாக இருந்துள்ளன.
பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை முடிவுகளின் மூலம் சென்னையில் விநியோகம் செய்யப்படும் பெரும்பாலான அடைக்கப்பட்ட குடிநீர் சுகாதாரமற்றவை எனத் தெரியவந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் ஆலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 புதிய வகை நன்னீர் தாவரங்கள் கண்டுபிடிப்பு.!
Loading More post
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை