பாஜகவில் இணைந்தார் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாசி சிங்

Shooter-Shreyasi-Singh-joins-in-BJP-for-upcoming-election

முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாசி சிங் பாஜகவில் இணைந்துள்ளார்


Advertisement

பீகாரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாசி சிங் வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அதற்காக பாரதிய ஜனதா கட்சியின் பூபேந்திர யாதவை, டெல்லி தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் ஸ்ரேயாசி.


Advertisement

நிதிஷ் குமார் மீது அதிருப்தி.. பீகாரில் தனித்து தேர்தலை சந்திக்க லோக் ஜனசக்தி முடிவு 

மறைந்த இவருடைய தகப்பனார் இந்திய தேசிய துப்பாக்கிப் படையின் தலைவராக இருந்தவர். தற்போது ஜமுய் மாவட்டத்தில் வசித்துவரும் ஸ்ரேயாசி சிங்க்கு அரசியலில் இதுதான் முதல் அனுபவம். இவர் அமர்பூர் அல்லது ஜமுயில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement