காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே வசித்து வரும் சதீஷ் (32) என்பவரை காரில் வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் "சதீஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் காரில் செங்கல்பட்டு சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் ஒரத்தூர் மேம்பாலம் அருகில் வந்தபோது பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள் வழிமறித்து நிறுத்தி ‘உன்னோடு பேச வேண்டுமென்று’ பாலத்திற்கு மேல் அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதைப்பார்த்த சதீஷின் டிரைவர் ராம் காரை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்” என்று கூறியுள்ளனர். மேலும் கொலைக்கு யார் காரணம்? தொழில் போட்டியா அல்லது முன் விரோதமா என்று பல கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?