கேரளா: விழுந்து நொறுங்கிய சிறிய ரக கிளைடர் விமானம்... 2 வீரர்கள் மரணம்

Navy-glider-crashes-in-Cochin

இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் கீழே விழுந்த விபத்தில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.


Advertisement

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி தளத்தில் இருந்து இன்று காலை இரண்டு கடற்படை வீரகள் சிறிய ரக கிளைடர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோப்பும்படி பாலத்தின் நடைபாதையில் திடீரென விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

image


Advertisement

இதில், அந்த விமானத்தில் இருந்த கடற்படை அதிகாரியான உத்ராஞ்சல் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ஜா மற்றும் கடற்படை வீரரான சுனில் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement