’இந்தி திணிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’: திமுக எம்.பி. கனிமொழி

uttar-pradesh-government-try-to-coverup-hathras-issue--kanimozhi-M-P

ஹத்ராஸ் செல்லும் அரசியல் தலைவர்களை, மக்களை தாக்கி தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இன்று கூட திருணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி தாக்கப்பட்டிருக்கிறார் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்


Advertisement

image

இது தொடர்பாக பேசிய அவர் “ உத்தரபிரதேசத்தில் மோசமாக நடைபெற்றுள்ள வன்முறையை மூடிமறைக்க தான் அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. குடும்பத்தினரை நெருங்க விடாமல் வீட்டில் வைத்து பூட்டி இறுதி சடங்கை காவல்துறையினரே நடத்தியுள்ளனர். இதை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்கள் பாடு படுத்தபட்டுள்ளார்கள். அங்கு செல்லும் அரசியல் தலைவர்களை, மக்களை தாக்குவதும், தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட திருணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி தாக்கப்பட்டிருக்கிறார். மோசமாக நடத்த பட்டிருக்கிறார். மூடி மறைப்பதற்கான முயற்சியில் தான் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது” என்றார்


Advertisement

மேலும்” மக்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் புரியாத மொழியை மக்களிடம் திணிக்கிறது பாஜக. இந்தி திணிப்பை மும்முரமாக செய்துவருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement