டிரம்ப் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு வெளியே கிடந்த மர்ம பை.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் டிரம்ப் சிகிச்சை பெற்று வரும் வால்டர் ரீட் மருத்துவமனைக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான பை காணப்பட்டதால், வெடிகுண்டு நிபுணர் குழு அதனை ஆய்வு செய்தது.


Advertisement

image

மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு நேற்று டிரம்ப் குணமாக வேண்டி நடைபெற்ற பேரணியின் போது சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பை கண்டறியப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து, ராக்வில் பைக்கின் ஒரு பகுதியை மூடி, போக்குவரத்தை திசை திருப்பி, டிரம்ப் ஆதரவாளர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றி பையை கைப்பற்றினார்கள்.


Advertisement

பிறகு மாண்ட்கோமெரி கவுண்டி வெடிகுண்டு குழு அந்த சந்தேகத்திற்குரிய பையினை ஆய்வு செய்யும் காட்சிகள் ஆன்லைனில் பகிரப்பட்டது, மோப்ப நாய்களும் அந்த பையை ஆய்வு செய்தன. முழுமையான விசாரணைக்கு பின்னர், அந்த பையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பிறகு அந்த பையின் உரிமையாளரிடம், பையை கொடுத்து திருப்பி அனுப்பிவைத்தனர். அவர் தற்செயலாக அப்பையை அங்கு விட்டுசென்றதாக கூறினார். அதன்பின்னர் அப்பகுதியில் இயல்புநிலை திரும்பியது என காவல்துறை தெரிவித்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement