பொதுமுடக்கத்தால் பராமரிப்பில்லை.. குப்பைமேடாகும் சென்னை பூங்காக்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை மாதிரியான பெருநகரங்களில் மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்த நாடுவது பூங்காக்களைத்தான். மாலை நேரத்து பூங்கா என்பது நகர மக்களின்  தவிர்க்கமுடியாத இடம். சென்னையைப் பொறுத்தவரை பல பூங்காக்கள் உள்ளன. முக்கியமான, நெருக்கமான இடங்களில் எல்லாம் ஓய்வுக்காக ஒரு பூங்கா இல்லாமல் இருப்பதில்லை.


Advertisement

மாலையில் நடைப்பயிற்சி, குழந்தைகளின் விளையாட்டு என சென்னை மக்களுக்கு ஓய்வு அளித்த பூங்காக்களுக்கே ஓய்வு அளித்துள்ளது கொரோனா. தொடர் ஊரடங்குகள் காரணமாக மூடப்பட்டது பூங்காக்கள். ஆனால் இந்த 6 மாத காலத்தில் பல பூங்காக்கள் புயலடித்த இடம்போல வெறுமையாக காட்சியளிக்கின்றன. 

image


Advertisement

மரங்கள் வளர்ந்து, புற்கள் மண்டி ஒரு காட்டைப்போல அவை மாறிவிட்டன. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேளச்சேரியில் உள்ள ஒரு சிறு பூங்கா. வேளச்சேரி வார்டு 179ல் உள்ள செல்வா நகரில் உள்ளது சென்னை மாநகராட்சியின் சிறுவர் விளையாட்டு பூங்கா. அங்குள்ள முதியவர்கள் மாலை நேரங்களில் வாக்கிங் செல்லவும், சிறுவர்கள் விளையாடவும் அந்த பூங்கா பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த இடம் பயன்பாட்டுக்கு பயனற்ற இடமாக மாறியுள்ளது.

அதுமட்டுமின்றி, அங்குள்ள சிலர் மது அருந்துதல் போன்ற செயல்களில் அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும் அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சிலர் பூங்காவில் குப்பை கொட்டவும் தொடங்கிவிட்டனர் என்றும் இன்னும் சில நாட்களில் பூங்கா குப்பைமேடாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் மாநகராட்சி இந்த பூங்காவை சுத்தம் செய்து மக்களின் பயன்பாட்டு தயார் செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement