தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை அறுவடை நடந்து வரும் நிலையில் சம்பா பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் 149 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன . கீவளூரை அடுத்துள்ள பட்டமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டியளித்தார் அப்போது, இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதியே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி செய்யப்பட்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளது என்றார்.
செப்-30 ஆம் தேதிவரை தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகளுக்கு மேல் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் 6 ஆயிரத்து நூற்றி 30 கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தபட்டுள்ளது என்றும் இந்த பணம் 24 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது என்றும் கூறிய அவர் தமிழகத்தில் இ-பேமண்ட் கொண்டு வந்ததில் இருந்து விவசாயிகள் பணம் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.
நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 600 மூட்டை முதல் 800 மூட்டை வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது 1000 மூட்டை வரை நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் கூறினார். கடந்தாண்டு வரலாறு படைத்ததைபோல இந்தாண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கியுள்ள இந்த சீசனில் குவிண்டாலுக்கு 53 ரூபாய் குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி நிர்ணயித்துள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்களில் எல்லாயிடங்களிலும் நெல் கொள்முதல் முமுவீச்சில் தொடங்கி விட்டதாக கூறிய காமராஜ் நாளை ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?