திருப்பூர்: அஸ்ஸாம் பெண் பாலியல் வன்கொடுமை; மேலும் இருவர் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அசாம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். 


Advertisement

image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள கள்ளிமேடு பகுதியில் வேலை தேடிவந்த அசாம் மாநில பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் முட்புதர் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர். 


Advertisement

image

 

மேலும் தலைமறைவாக இருந்த மூன்று பேரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமார், தாமோதரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இளந்தமிழனை பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement