நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல தற்கொலை தான் என்று எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை கொண்டு ஆய்வு செய்து வந்தது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் ஆய்வை செப்டம்பர் 29ஆம் தேதி மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு சமர்ப்பித்தனர். எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கை கூப்பர் மருத்துவமனையின் அறிக்கையுடன் ஒத்துப்போகின.
சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஷ்சிங், சுஷாந்த் கொலை செய்யப்பட்டதுக்கான சாத்திய கூறுகள் 200 சதவீதம் உறுதியாகியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா, இது 200 சதவீதம் தற்கொலைக்கான சாத்தியக்கூறே உள்ளது. இன்னும் விசாரணை முடியவில்லை. அது முடிந்த பின்பே இதற்கான முழு விவரங்களும் தெரியவரும் என்று குறிப்பிட்டார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14 அன்று அவரது பாந்த்ரா வீட்டில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்குப்போட்டுக் கொண்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?