உறவுக்காரர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இடத்தில் மகனை பறிகொடுத்த தந்தை..!

A-15-year-old-boy-who-went-to-bathe-in-a-pool-in-Ramanathapuram-Disaster-caused-

ராமநாதபுரத்தில் 15 வயது பள்ளி சிறுவன் குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி பலியானார். தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சிறுவனின் உடலை மீட்டனர்.  


Advertisement

image 
விருதுநகரைச் சேர்ந்த கோபி என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் மாரிச்செல்வம் வீட்டுக்கு தன்னுடைய குடும்பத்தோடு சென்றுள்ளார். இன்று காட்டு பிள்ளையார் கோவில்தெரு பகுதியில் உள்ள பள்ளி குளத்தில் குளிப்பதற்காக விஷ்வா, விமல் என்ற தன்னுடைய இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த பதினைந்து வயது சிறுவன் விமல் தண்ணீரில் மூழ்கினான். அதை கண்ட அண்ணன் விஷ்வா காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளார். இதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் குதித்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் காப்பாற்ற முடியாமல் ஆழத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரில் மூழ்கி மாயமான சிறுவன் விமல் உடலை மீட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். விபத்து குறித்;து ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

உறவுக்காரர் வீட்டுக்கு குடும்பத்தோடு வந்த இடத்தில் இளைய மகனை பறிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement