விஜய், ஸ்ருதி வரிசையில் இணைந்த த்ரிஷா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசனை தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்றுக்களை நட்டுள்ளார்.


Advertisement

பசுமை நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிரீன் இந்தியா என்ற தலைப்பில் சவாலை ஒன்றை உருவாக்கி, பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.

image


Advertisement

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தன்னுடைய பிறந்த நாளில் கிரீன் இந்தியா என்ற தலைப்பில் செடி ஒன்றை நட்டு, நடிகர் விஜய் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்றுகொண்ட நடிகர் விஜயும், ஸ்ருதிஹாசனும், தத்தமது இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டு சவாலை நிறைவேற்றினர்.

இந்நிலையில் தானும் க்ரீன் இந்தியா சவாலை ஏற்றுக்கொண்டு இன்று இரண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளேன் என நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சவாலில் உங்கள் பங்கையும் வழங்கி, பசுமை இந்தியாவை உருவாக்க உதவுமாறு கேட்டுக்கொள்வதாகவும் நடிகை த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

மாஸ்டர் ஒரு ’மாஸ்டர் பீஸ்’: விஜய் சேதுபதி 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement